18 நவம்பர் 2018

ஜப்பான் ஓபன்: மனு அட்ரி-சுமித் இணை வெற்றி

DIN | Published: 13th September 2018 12:59 AM
மனு அட்ரி-சுமித் ரெட்டி.


ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணை அபாரமாக ஆடி ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற மலேசியாவின் ஜோ விசெம்-டேன் விகியோங் இணையை வென்றனர்.
டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியன்களான மனு-சுமித் இணை 15-21, 23-21, 21-19 என்ற கேம் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தினர்.
மற்றொரு ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக்-ரங்கிரெட்டி இணை 12-21, 17-21 என்ற கேம்கணக்கில் ஜப்பானின் டகேஷி-கீகோ இணையிடம் தோல்வியுற்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி இணை 17-21, 13-21 என கொரியாவின் சாங் நா-ஜங் இன் இணையிடம் தோல்வியுற்றது.
பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் பங்கேற்கும் ஆட்டங்கள் வியாழக்கிழமை நடக்கின்றன.


 

 

More from the section

2-ஆவது டெஸ்டிலும் இலங்கை தோல்வி: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
உலக மகளிர் குத்துச்சண்டை: சோனியா, பிங்கி அபாரம்
உலக ஜூனியர் பாட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்
கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள்: ஆஸி. வீரர்களுக்கு டுபிளெஸிஸ் அறிவுரை
நேஷன்ஸ் லீக்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது உலக சாம்பியன் பிரான்ஸ்