சனிக்கிழமை 17 நவம்பர் 2018

தேசிய அணியில் மீண்டும் பங்கேற்று விளையாடிய லைபீரிய நாட்டு அதிபர்

DIN | Published: 13th September 2018 01:00 AM
லைபீரிய கால்பந்து அணியில் பங்கேற்று விளையாடிய அதிபர் ஜார்ஜ் வியா.


மீண்டும் தேசிய அணியில் பங்கேற்று விளையாடி லைபீரிய நாட்டு அதிபர் ஜார்ஜ் வியா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஜார்ஜ் வியா லைபீரியா, ஐவரிகோஸ்ட், கேமரூன் ஆகிய நாடுகளில் விளையாடி பின்னர் ஐரோப்பாவில் பிரபல கால்பந்து அணிகளான பாரிஸ் செயின்ட் ஜெர்மன், மொனாக்கோ, மார்செய்ல், ஏ சி மிலன் அணிகளிலும் விளையாடினார். அவரது சிறந்த ஆட்டத்துக்காக கடந்த 1995-இல் உலக, ஐரோப்பிய, ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ், கடந்த டிசம்பரில் நடைபெற்ற லைபீரிய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மொன்ரோவியாவில் நைஜீரிய அணியுடன் நடைபெற்ற சர்வதேச நட்பு ஆட்டத்தில் லைபீரிய அணி சார்பில் பங்கேற்று விளையாடினார் 51 வயதான ஜார்ஜ் வியா. இதில் 2-1 என நைஜீரியா வென்றது.
அவர் அணிந்து ஆடிய 14-ஆம் எண் சீருடைக்கும் ஓய்வு தரும் வகையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.


 

 

More from the section

பாக். ஹாக்கி அணிக்கு விசா: இந்தியா முடிவு
23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்தம்: இறுதியில் ரவிக்குமார்
உலக மகளிர் குத்துச்சண்டை: மனிஷாமௌன் அபாரம்
ஏடிபி பைனல்ஸ்: அரையிறுதியில் பெடரர்
வெற்றியுடன் விடை பெற்றார் வேய்ன் ரூனி