செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

நேஷன்ஸ் லீக் கால்பந்து: பெல்ஜியம், ஸ்பெயின் அபார வெற்றி

DIN | Published: 13th September 2018 12:58 AM


யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 6-0 என குரோஷியாவை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் என்ற புதிய போட்டி அறிமுகம் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக்கில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகக் கோப்பையில் மூன்றாம் இடம் பெற்ற பெல்ஜியமும்-ஐஸ்லாந்தும் மோதின.
பெல்ஜிய நட்சத்திர வீரர்கள் லுகாகு அபாரமா ஆடி 2 கோல்கள் அடித்தார். அதே நேரத்தில் மூத்த வீரரான ஈடன் ஹசார்டும் வெற்றி கோலை அடித்தார். இறுதியில் 3-0 என பெல்ஜியம் வென்றது.
குரோஷியா அதிர்ச்சித் தோல்வி:
ஸ்பெயின் எல்சி நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும், ரஷிய உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற குரோஷியாவும் மோதின. இதில் ஸ்பெயின் தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. உலகக் கோப்பையில் படுதோல்வியடைந்த நிலையிலும், இப்போட்டியில் குரோஷியாவை பந்தாடியது. செர்ஜியோ ரமோஸ், இஸ்கோ, ரோட்ரிஜோ மோரினோ, மார்கோ அùஸன்சியோ, சால் நிகுஸ் ஆகியோர் கோலடித்தனர்.
6-0 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணி அதிர்ச்சித்தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற ஸ்பெயினுக்கு 2 புள்ளிகளே தேவைப்படுகிறது. இங்கிலாந்து, குரோஷியாவும் மேலும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
பிரேஸில் அபாரம்:
அமெரிக்காவின் மேரிலாந்தில் நடைபெற்ற பிரேஸில்-எல்சல்வடார் அணிகளுக்கு இடையிலான நட்பு ஆட்டத்தில் 5-0 என பிரேஸில் அபார வெற்றி பெற்றது.

 

More from the section

தில்லி ஐபிஎல் அணியுடன் இணைவாரா ஜோ ரூட்?: கங்குலியின் பரிந்துரைக்குப் பிறகு உருவாகியுள்ள எதிர்பார்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் மீதான தடை தொடரும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு!
உலக மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் சோனியா, பிங்கி, சிம்ரஞ்சித் கெளர்
ஏடிபி பைனல்ஸ்: அலெக்சாண்டர் வெரேவ் சாம்பியன்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி