புதன்கிழமை 14 நவம்பர் 2018

ரவி சாஸ்திரிக்கு ரூ.2.05 கோடி உள்பட வீரர்களுக்கு ஊதியம் விநியோகம்: பிசிசிஐ தகவல்

DIN | Published: 13th September 2018 01:00 AM


தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு ரூ.2.05 கோடி உள்பட வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலகிலேயே செல்வாக்கும், பணபலமும் பொருந்திய விளையாட்டு அமைப்பாக திகழ்ந்து வருகிறது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ஏ, பி, சி என நிலைகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. வருமான வரிபிடித்தம் செய்யப்பட்டு ஊதியம் தரப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான காலத்துக்கு ரூ.2.05 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.
கோலிக்கு ரூ.1.25 கோடி:
அதே நேரத்தில் கேப்டன் கோலிக்கு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண ஊதியம் மற்றும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட தொகை சேர்த்து மொத்தம் ரூ.1.25 கோடி தரப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் ஊதியம் ரூ.65,000,00, ஒரு நாள் தொடர் ஊதியம் ரூ.30,70,456, ஐசிசி தரவரிசை தொகை ரூ.29,27,700 லட்சம்.
புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், ஷிகர் தவனுக்கு ரூ.2.8 கோடியும் ஊதியமாக கிடைத்துள்ளன.
துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.
புவனேஸ்வர் குமாருக்கு அதிகம்:
அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு ரூ.3.73 கோடி தரப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு ரூ.25 லட்சம் தரப்பட்டது.
பும்ராவுக்கு ரூ. பார்த்திப் பட்டேலுக்கு ரூ.44 லட்சம், ரித்திமன் சாஹாவுக்கு ரூ.44.3 லட்சம், தினேஷ்கார்த்திக்குக்கு ரூ.60 லட்சம், இஷாந்த் சர்மாவுக்கு ரூ.1.33 கோடி, பாண்டியாவுக்கு ரூ.1.1 கோடி, ரோஹித் சர்மாவுக்கு ரூ.1.14 கோடியும், அஸ்வினுக்கு ரூ.2.7 கோடியும், சஹாலுக்கு ரூ.1.1 கோடியும் ஊதியமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தரப்பட்டுள்ளது.
இத்தகவலை பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

More from the section

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நாளை தொடக்கம்
விடைபெறுகிறார் வேய்ன் ரூனி
ஏடிபி பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிராக வலுவான நிலையில் ஹைதராபாத் 523/7
ஐசிசி ஒரு நாள் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்