சனிக்கிழமை 17 நவம்பர் 2018

15-இல் ஆசிய கோப்பை கிரிக்கெட்

DIN | Published: 13th September 2018 12:56 AM


ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. கடும் ஆட்ட சுமை காரணமாக கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பட்டத்தை தக்க வைக்க களமிறங்குகிறது. துபை, அபுதாபி நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.
போட்டி அட்டவணை:
15-இல் வங்கதேசம்-இலங்கை (துபை), 16-இல் பாகிஸ்தான்-ஹாங்காங் (துபை), 17-இல் இலங்கை-ஆப்கானிஸ்தான் (அபுதாபி),
18-இல் இந்தியா-ஹாங்காங் (துபை), 19-இல் இந்தியா-பாகிஸ்தான் (துபை), 20-இல் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் (அபுதாபி).
சூப்பர் ஃபோர்:
21-குரூப் ஏ வின்னர்-குரூப் பி ரன்னர் (துபை), குரூப் பி வின்னர்-குரூப் ஏ ரன்னர் (அபுதாபி),
23-குரூப் ஏ வின்னர்-குரூப் ஏ ரன்னர் (துபை), குரூப் பி வின்னர்-குரூப் பி ரன்னர் (அபுதாபி).
25-குரூப் ஏ வின்னர்-குரூப் பி வின்னர் (துபை), 26-குரூப் ஏ ரன்னர்-குரூப் பி ரன்னர் (அபுதாபி).
இறுதி ஆட்டம்: 28.9.19 (துபை).
இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டங்கள் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் ஒளிபரப்பாகும்.

 

More from the section

பாக். ஹாக்கி அணிக்கு விசா: இந்தியா முடிவு
23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்தம்: இறுதியில் ரவிக்குமார்
உலக மகளிர் குத்துச்சண்டை: மனிஷாமௌன் அபாரம்
ஏடிபி பைனல்ஸ்: அரையிறுதியில் பெடரர்
வெற்றியுடன் விடை பெற்றார் வேய்ன் ரூனி