செல்ல நாய் கடித்ததால் தையல் போடுமளவுக்குக் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்!

ஷார்ட், ரால்பி என்கிற செல்ல நாயை வளர்த்து வருகிறார். இரு வாரங்களுக்கு முன்பு அந்த நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது...
செல்ல நாய் கடித்ததால் தையல் போடுமளவுக்குக் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலிய வீரரான டார்சி ஷார்ட் விநோதமான சூழலை எதிர்கொண்டுள்ளார். 

இன்று, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கும் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே பெர்த்தில் ஒருநாள் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய வீரரான டார்சி ஷார்ட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷார்ட், ரால்பி என்கிற செல்ல நாயை வளர்த்து வருகிறார். இரு வாரங்களுக்கு முன்பு அந்த நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் ஷார்டின் கையில் கடித்துவிட்டது. இதனால் அவர் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடிபட்ட இடத்தில் தையல் போட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தச் சுற்று ஆட்டங்களில் ஷார்ட் கலந்துகொள்வார் என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com