செய்திகள்

கேல்ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை

DIN


சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் கோரி, மல்யுத்த வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் நீரஜ் சோப்ரா உள்பட 20 பெயர்கள் அர்ஜுன விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா, அர்ஜுன விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் விருதுகள் தேர்வுக் குழு நிகழாண்டுக்கான வீரர்கள் பெயர்களை விருதுகளை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மல்யுத்த வீராங்கனையும், உலக சாம்பியனுமான மீராபாய் சானு பெயர்கள் இணைந்து கேல்ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கோலி உள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக சிறப்பாக ஆடியிருந்தாலும் கோலி பெயர் 2016, 2017 பட்டியலில் இடம்பெறவில்லை. சாக்ஷி மாலிக், சிந்து, தீபா கர்மாகருக்கும், 2017-இல் ஹாக்கி வீரர் சர்தார் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கும் வழங்கப்பட்டன. எனினும் கோலிக்கு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது கோலியின் பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர் பல்வேறு ஐசிசி விருதுகளை வென்றுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை மீராபாய் சானு உலக சாம்பியன் பட்டமும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். காயம் காரணமாக ஆசிய போட்டியில் பங்கேற்கவில்லை. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தரும் வாய்ப்புள்ளவராக அவர் உள்ளார்.
கேல்ரத்னா விருது: விராட் கோலி, மீராபாய் சானு.
அர்ஜுன விருது: நீரஜ் சோப்ரா, ஜின்ஸன் ஜான்சன், ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பாட்மிண்டன்), சதீஷ்குமார் (குத்துச்சண்டை), மந்தானா (கிரிக்கெட்), சுபாங்கர் சர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங், சவிதா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ராஹி சர்னோபாத், அங்குர் மிட்டல், ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மனிகா பத்ரா, ஜி.சத்யன் (டேபிள் டென்னிஸ்), போபண்ணா (டென்னிஸ்), சுமித் (மல்யுத்தம்), பூஜா கடியன் (வுஷு), அங்குர் தர்மா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பாட்மிண்டன்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT