செய்திகள்

பான் பசிபிக் டென்னிஸ் : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஷ்லே பார்ட்டி

DIN


ஜப்பானில் நடைபெறும் பான் பசிபிக் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ நகரில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் ஆஷ்லேவும், அமெரிக்காவின் கோகோ வான்டெவேக்கும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் ஆஷ்லே 4-6, 6-3, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஆஷ்லே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை சந்திக்கிறார். முன்னதாக விக்டோரியா தனது முதல் சுற்றில் ஜப்பானின் குருமி நாராவை 6-4, 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்திருந்தார்.
இதனிடையே, யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த அவரை, குரோஷியாவின் டோனா வெகிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சாய்த்தார்.
வெகிச் தனது அடுத்த சுற்றில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை எதிர்கொள்கிறார். ஜோஹன்னா, 6-2, 6-0 என்ற செட்களில் கனடாவின் கேப்ரியேலா டப்ரோஸ்கியை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் பார்போரா ஸ்டிரைக்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் ஜரினா டியாஸை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே 6-4, 6-4 என்ற செட்களில் கனடாவின் யுஜினி பெளச்சார்டை வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT