செய்திகள்

மாரடோனாவுக்கு முதல் வெற்றி

DIN


பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது.
மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்தாட்டத்தில், டொராடோஸ் அணி தனது சக 2-ஆவது டிவிஷன் அணியான கஃபேடலேரோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மெக்ஸிகோவின் கியூலியாகேன் நகரத்தைச் சேர்ந்த டொராடோஸ் கால்பந்து அணி தடுமாற்றத்துடன் இருந்த நிலையில், அதன் பயிற்சியாளராக பொறுப்பேற்று அனைவரையும் வியப்படையச் செய்திருந்தார் மாரடோனா. இந்நிலையில், மாரடோனா பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டொராடோஸ் வெற்றி கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில், ஈகுவடாரைச் சேர்ந்தவரும், டொராடோஸின் முன்கள வீரருமான வினிசியோ அங்குலோ ஹாட்ரிக் கோலடித்தார். அணியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாரடோனா கூறியதாவது:
இந்த ஆட்டம் அருமையானதாக இருந்தது. மாரடோனா பயனற்றவர் என்று சிலர் கூறினர். சில முட்டாள்கள் நேரப் போக்கிற்காக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கால்பந்தாட்டம் பார்க்கிறார்கள். அவர்கள் களத்துக்கு வந்து, எனது சாதனைகளையும், நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், எங்களால் என்ன செய்ய இயலும் என்பதையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த வெற்றி ஒரு தொடக்கம் தான். நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று மாரடோனா கூறினார்.
இந்த வெற்றியின் மூலமாக 3 புள்ளிகள் வென்றுள்ள டொராடோஸ் அணி, லீக் வரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT