சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல், பார்சிலோனா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க சுற்றுகளில் லிவர்பூல், பார்சிலோனா அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.
ஹாட்ரிக் கோலடித்த மெஸ்ஸி.
ஹாட்ரிக் கோலடித்த மெஸ்ஸி.


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க சுற்றுகளில் லிவர்பூல், பார்சிலோனா அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஐரோப்பாவின் பிரபல கால்பந்து அணிகளிடையே நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ் லீக் சாம்பியன் பிஎஸ்ஜி மற்றும் இங்கிலாந்து பிரீமியர் லீக் சாம்பியன் லிவர்பூல் அணிகள் பாரிஸில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணிய வீழ்த்தியது.
மாப்பே, நெய்மர் உள்ளிட்ட பிரபல வீரர்கள் இடம் பெற்றுள்ள பிஎஸ்ஜி அணிக்கும், லிவர்பூல் அணிக்கும் துவக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது. லிவர்பூல் அணியில் டேனியல் ஸ்டரிட்ஜ், ஜேம்ஸ் மில்னர் ஆகியோர் கோலடித்தனர். பிஎஸ்ஜிஅணியில் தாமஸ் யுனியர், எடிசன் கேவனி ஆகியோர் கோலடித்து சமநிலை ஏற்படுத்தினர். இறுதியில் லிவர்பூல் அணியின் ராபர்டோ பிர்மினோ கடைசி நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். பிஎஸ்ஜி அடுத்த ஆட்டத்தில் பெல்கிரேட் ரெட் óடார் அணியுடன் மோதவுள்ளது.
பார்சிலோனா வெற்றி:
அதே நேரத்தில் லா லீகா சாம்பியன் பார்சிலோனாவுக்கும் பிஎஸ்வி ஐந்தோவன் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அபாரமாக ஹாட்ரிக் கோலடித்தார். இறுதியில் உஸ்மான் டெம்புள் அடித்த கோல் மூலம் 4-0 என பார்சிலோனா வென்றது. அடுத்த ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியுடன் பார்சிலோனா மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com