இந்திய கால்பந்து திருவிழா: ஐஎஸ்எல் 2018-19 சீசன் 5

இந்தியாவின் கால்பந்து திருவிழாவான ஐஎஸ்எல் கால்பந்து 2018-19 5-ஆவது சீசன் போட்டிகள் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி வரை நடைபெறவுள்ளன.
இந்திய கால்பந்து திருவிழா: ஐஎஸ்எல் 2018-19 சீசன் 5


இந்தியாவின் கால்பந்து திருவிழாவான ஐஎஸ்எல் கால்பந்து 2018-19 5-ஆவது சீசன் போட்டிகள் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி வரை நடைபெறவுள்ளன.
கடந்த மார்ச் 8-ஆம் தேதியோடு ஐஎஸ்எல் 4-ஆம் சீசன் போட்டிகள் நிறைவடைந்தன. 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உலகக் கோப்பை கால்பந்து, ஆசிய போட்டிகள் என பரபரப்பான கால்பந்து போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் தற்போது உள்ளூரில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. போட்டி அட்டவணை ஐஎஸ்எல் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வரைக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 
சீசனின் முதல் தொடக்க ஆட்டம் இரண்டு முறை சாம்பியன் ஏடிகே கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே வரும் 29-இல் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் முன்பு அரையிறுதிச் சுற்றில் மோதியுள்ளனர். மேலும் இந்த சீசநன் போட்டிகள் இடையே இரு முறை ஓய்வு தரப்படுகிறது. 
இரு முறை ஓய்வு: அக்டோபர் 8 முதல் 16 வரையும், நவம்பர் 12 முதல் 20 வரையும், இதில் அடங்கும். குறிப்பாக 2019-இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கவுள்ள ஆசிய கால்பந்து கோப்பை ஏஎப்சி போட்டியில் இந்திய அணிக்கான தேசிய பயிற்சி முகாம். மற்றும் ஏஎப்சி போட்டிக்காகவும் இந்த ஓய்வு அளிக்கப்படுகிறது. ஐ லீக் கால்பந்து போட்டியோடு, ஐஎஸ்எல் லீக் போட்டிகளும் நடக்க உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் எதில் பங்கேற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நாளொன்றுக்கு ஒரு ஆட்டம்: முந்தைய சீசன்களில் ஒரு நாளைக்கு 2 ஆட்டங்கள் நடத்தப்படும் என்பது மாற்றப்பட்டு, நடப்பு சீசனில் நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டம் மட்டுமே நடைபெறும். அனைத்து ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
ஏடிகே கொல்கத்தா, பெங்களூரு, சென்னையின், தில்லி டைனமோஸ், கோவா, ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், புணே சிட்டி கால்பந்து கிளப் அணிகள் 10 இதில் ஆடுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்கள் என்பது மாற்றப்பட்டு 7 வீரர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஊதியத்துக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
பிரபல வீரர்கள்: கடந்த 4-ஆவது சீசனைப் போல் இந்த சீசனில் பிரபல வீரர்கள் அதிகம் பேர் பங்கேற்கவில்லை. எனினும் ஆஸி. அணியின் கால்பந்து ஜாம்பவான் டிம் காஹில், ஜாம்ஷெட்பூர் அணியிலும், போர்ச்சுகல் அணி முன்னாள் வீரர் பாவ்லோ மக்கடோ மும்பை அணியிலும், வெனிஸþலா ஸ்ட்ரைக்கர் மிகு பெங்களூரு அணியிலும் விளையாடுகின்றனர்.
கடந்த 2017-18 சீசனில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னையின் அணி பட்டம் வென்றது. நடப்பு சாம்பியன் அந்தஸ்தோடு களம் காணும் சென்னையின் அணிக்கு ஏஎஃப்சி கால்பந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனினும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஐ லீக் சாம்பியன் பட்டம் வென்ற அணியே இடம் பெறும் என்பது குறிப்பிடத்கக்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com