ஜோகோவிச்சுடன் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம்

லேவர் கோப்பை போட்டியில் ஜோகோவிச்சுடன் சேர்ந்து ஆட ரோஜர் பெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜோகோவிச்சுடன் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம்


லேவர் கோப்பை போட்டியில் ஜோகோவிச்சுடன் சேர்ந்து ஆட ரோஜர் பெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அணிகள் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் ஜோகோவிச் கலந்து கொள்கிறார். ஐரோப்பிய அணி நட்சத்திர வீரரும், இரண்டாம் நிலை வீரருமான பெடரர் அவருடன் மோத விருப்பம் தெரிவித்துள்ளார். இதில் உலகின் முதல் 12 வீரர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு எதிராக ஆட உள்ளனர். ஐரோப்பாவைச் சேர்ந்த 6 சிறந்த ஏடிபி தரவரிசை வீரர்களுடன், உலகின் இதர ஏடிபி சிறந்த தரவரிசை வீரர்கள் மோதுகின்றனர்.
பெடரர், ஜோகோவிச். வெரேவ், டிமிட்ரோவ், கோபின், கைல் எட்மண்ட். ஐரோப்பிய அணியிலும், ஜேக் சாக், நிக் கிரிஜியோஸ், ஜான் ஐஸ்நர், பிரான்ஸஸ், கெவின் ஆண்டர்சன், டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் இதர உலக அணியிலும் இடம் பெற்றுள்ளனர். செக் குடியரசு பிராகில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஐரோப்பா 15-9 என்ற செட் கணக்கில் வென்றது. டென்னிஸ் ஜாம்பவானும், 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 5 முறை டேவிஸ் கோப்பை வென்றவருமான ஆஸி. வீரர் ராட் லேவர் பெயரில் இந்த கோப்பை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com