செய்திகள்

ஊக்க மருந்து பயன்படுத்தியது பற்றிய புகாரில் ரஷிய அமைப்பு மீதான தடை நீக்கம்

DIN


ரஷிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உலக அமைப்பான வாடா நீக்கியுள்ளது. இதன் மூலம் ரஷிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்க முடியும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷிய தடகள வீரர்கள் சிக்காமல் காப்பாற்றுவதற்காக ருஸாடா, அந்நாட்டு விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு வழிமுறைகளை கையாண்டதாக புகார்கள் எழுந்தன. ரஷிய வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வாடாவுக்கு அனுமதி அலிக்கவில்லை. 
இதையடுத்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (வாடா) விசாரணை நடத்தி, ரஷிய அமைப்பான ருஸாடாவுக்கு தடை விதித்தது.
இதனால் மூன்று ஆண்டுகளாக ரஷிய தடகள வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வாடா செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ருஸாடா மீதான தடையை நீக்குவது என முடிவு செய்தனர்.
இதுதொடர்பாக வாடா தலைவர் கிரெய்க் ரீடி கூறுகையில்: ஊக்க மருந்து சோதனைக்காக ரஷிய வீரர்களின் மாதிரிகள் தொடர்பாக விவரங்களை வாடாவுக்கு அளிக்க வேண்டும். தனது வாக்குறுதியை ருஸாடா நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும் என்றார்.
எனினும் வாடாவின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாடா துணைத் தலைவர் லிண்டா ஊக்க மருந்து தடுப்பு முறையே கேள்விக்குறியாகி விட்டது. விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க எடுக்கும் நடவடிக்கைகள் பயனற்றவையாகி விட்டன. இதனால் தூய்மையான வீரர்களும் அதிருப்தி அடைவர் என்றார். பல்வேறு மேலைநாடுகளும் இது நம்பிக்கை துரோகம் என கூறியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT