துளிகள்....

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

*புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.
*உலக பாட்மிண்டன் முன்னாள் முதல் நிலை வீரரும், 3 முறை ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான மலேசிய வீரர் லீ சொங் வெய் மூக்கில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் நடைபெற்ற ஜகார்த்தா ஆசியப் போட்டி, நான்ஜிங் உலக பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்காமல் விலகினார் லீ.
*இந்தியா கராத்தே சங்கத்தின் தேர்தல்களை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட இடைக்கால குழுவை நியமித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம். ஏற்கெனவே பதவியில் இருந்த நிர்வாகிகள் காலம் முடிந்து விட்டதாலும், தேர்தலை நடத்த தாமதம் செய்ததாலும், ஐஓஏ இடைக்கால குழுவை நியமித்துள்ளது. 3 மாதங்களில் நேர்மையான முறையில் உலக கராத்தே சம்மேளன பார்வையாளர் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
*டோஹாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன் போட்டிக்கான இந்திய அணி தேர்வுச் சுற்று சாய் சார்பில் வரும் 29, 30 தேதிகளில் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் தீபா கர்மாகர், ராகேஷ் பட்ரா உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகாரம் ரத்து செய்துள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*தில்லியில் நடைபெறும் டிராக் ஏஷியா சைக்கிளிங் போட்டியின் இரண்டாவது நாளான சனிக்கிழமை இந்தியா மேலும் ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது. 4 தங்கம், 5 வெள்ளி, 
1 வெண்கலத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com