செய்திகள்

விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் கேல்ரத்னா விருதுகள்

DIN


கிரிக்கெட் வீரர் விரோட் கோலி, பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்ன விருதுகள், உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளை செவ்வாய்க்கிழமை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த விளையாட்டு வீரருக்கு உயர்ந்தபட்சமாக ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. மேலும் இதுதவிர வீரர்களுக்கு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது. 
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மூலம் கடந்த 4 ஆண்டுகளில் வீரர்கள், வீராங்கனைகள் செய்துள்ள சாதனைகள் அடிப்படையில் விருதுகளுக்குரியவர்களை தேர்வு செய்கிறது. நிகழாண்டு கேல்ரத்னா விருதுக்கு கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. முதலில் கோலிக்கும், மீராபாய் சானுவுக்கும் கேல் ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அதைத் தொடர்ந்து அர்ஜுனா விருதுகள்,துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளையும் அவர் வழங்கி பாராட்டினார்.
விராட் கோலி: விராட் கோலி 71 டெஸ்ட்களில் 6147 ரன்களையும், 211 ஒரு நாள் ஆட்டங்களில் 9779 ரன்களையும், எடுத்துள்ளார். கடந்த 2013-இல் அர்ஜுனா, விருதையும், 2017-இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார். ஏற்கெனவே 2016, 2017-இல் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும் விருது பெறவில்லை. சச்சின் டெண்டுல்கர் 1997-98, தோனி 2007 ஆகியோருக்கு அடுத்து கேல்ரத்னா விருது பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் கோலி ஆவார். தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார் கோலி.
விழாவில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா, தாயார் சரோஜ் கோலி, சகோதரர் விகாஸ் பங்கேற்றனர்.
மீராபாய் சானு: பளு தூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு கடந்த 2017 உலக சாம்பியன் போட்டியில் 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கமும், கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். எனினும் காயம் காரணமாக கடந்த ஜகார்த்தா ஆசிய போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
கேல்ரத்னா விருதோடு ரூ.7.5 லட்சம் ரொக்கமும், அர்ஜூனா விருதுகளோடு ரூ.5 லட்சம் ரொக்கமும் பரிசாக தரப்படுகின்றன.
அர்ஜுனா விருது: நீரஜ் சோப்ரா, ஜீன்சன் ஜான்சன், ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பாட்மிண்டன்), சதிஷ்குமார் (குத்துச்சண்டை), ஸ்மிருதி மந்தானா (கிரிக்கெட்), சுபாங்கர் சர்மா (கோல்ஃப்), மன்பிரீத் சிங், சவிதா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ராஹி சர்னோபத், அங்குர் மிட்டல், ஷிரேயாஸி சிங் (துப்பாக்கி சுடுதல்), மனிகா பத்ரா, ஜி.சத்யன் (டேபிள் டென்னிஸ்), ரோஹன் போபண்ணா (டென்னிஸ்), சுமித் (மல்யுத்தம்), பூஜா கடியன் (வுஷு), அங்குர் தர்மா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பாட்மிண்டன்).


துரோணாச்சார்யா விருது: சி.ஏ.குட்டப்பா (குத்துச்சண்டை), விஜய் சர்மா (பளுதூக்குதல்), ஏ.சீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்), சுக்தேவ் சிங் பன்னு (தடகளம்), கிளாரென்ஸ் லோபோ (ஹாக்கி-வாழ்நாள்), தரக் சின்ஹா (கிரிக்கெட்-வாழ்நாள்), ஜீவன் குமார் சர்மா (ஜூடோ-வாழ்நாள்), வி.ஆர்.பீடு (தடகளம்-வாழ்நாள்).
தயான்சந்த் விருது: சத்தியதேவ் பிரசாத் (வில்வித்தை), பரத்குமார் சேத்ரி (ஹாக்கி), பாபி அலோசியஸ் (தடகளம்), செளகலே தடு தத்தாரே (மல்யுத்தம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT