1987 ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நடைபெற்ற முதல் 3 உலகக் கோப்பை போட்டிகளும் (1975, 1979, 1983) இங்கிலாந்திலேயே நடைபெற்றன.
1987 ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நடைபெற்ற முதல் 3 உலகக் கோப்பை போட்டிகளும் (1975, 1979, 1983) இங்கிலாந்திலேயே நடைபெற்றன. மேலும் அவை புருடென்ஷியல் கோப்பை போட்டி எனவும் அழைக்கப்பட்டன.
இங்கிலாந்துக்கு வெளியே முதன்முறையாக 1987-ஆம் ஆண்டு நான்காவது உலகக் கோப்பை போட்டியை இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இணைந்து நடத்தின. அக்டோபர் 8 முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் ரிலையன்ஸ் கோப்பை என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.
50 ஓவர் ஆட்ட முறை: முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் 60 ஓவர் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் நான்காவது உலகக் கோப்பையில் 50 ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இதில் ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 14 மைதானங்களிலும், பாகிஸ்தானில் 7 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. 
இந்திய அணி லீக் ஆட்டங்கள்: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1 ரன்னில் தோல்வி கண்டது இந்தியா, நியூஸிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் ஆஸி.யை 56 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்திலும், நியூஸிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது இந்தியா.
அரையிறுதிச் சுற்று: இரண்டு பிரிவுகளில் 4 அணிகள் தலா 2 முறை ஆடின. இதில் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், பி பிரிவில் இருந்து பாகிஸ்தானும், இங்கிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 
மும்பையில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவை (219), 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து (254/6,) இறுதிச் சுறறில் நுழைந்தது.
அதே போல் லாகூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானை (249),  18 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. (267/6) இறுதிக்குள் நுழைந்தது. போட்டியை நடத்திய இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுமே இறுதிக்கு தகுதி பெறவில்லை. 
ஆஸ்திரேலியாவுக்கு முதல் பட்டம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸி.-இங்கிலாந்து இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தை 95000 பேர் கண்டு களித்தனர்.
முதலில் ஆடிய ஆஸி. 253/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 246/8 ரன்களை மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியுற்றது.
அதிக ரன்கள் எடுத்தவர்: கிரஹாம் கூச் (471), அதிக விக்கெட் வீழ்த்தியவர்: கிரெய்க் மெக்டர்மாட் (18). முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
முதல் ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் ஹாட்ரிக் விக்கெட்டை இந்திய வீரர் சேதன் சர்மா, நியூஸிலாந்துக்கு எதிராக கைப்பற்றினார்.
நவ்ஜோத் சிங் சித்து 9 சிக்ஸர்களை விளாசினார். 2 முறை சாம்பியனான மே.இ.தீவுகள் முதல் சுற்றோடு வெளியேறியது. 

-தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com