செய்திகள்

ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்று கோமதி சாதனை

DIN

டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி (30), தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ராசாத்தி தம்பதியின் மகள் கோமதி (30). மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி, அடிப்படை வசதிகளில்லாத கிராமம், பள்ளிப் படிப்புக்கு கூட 15 கி.மீ. தொலைவு நடந்தே செல்லும் நிலை இருந்தது அவருக்குள் தடகளப் போட்டிக்கான உத்வேகத்தை அளித்தது. 
தற்போது 2019 டோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் (2 நிமிடம், 2.70 விநாடிகள்) தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தனது மகள் தங்கம் வென்றதைக் கூட அறியாத, கூலி வேலை செய்து வந்த கோமதியின் தாய் ராசாத்திக்கு,  அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கோமதி தங்கம் வென்றிருப்பதைத் தெரிவித்து தொலைக்காட்சியில் காண்பித்துள்ளனர். 

இதுதொடர்பாக, கோமதியின் தாய் ராசாத்தி கூறியது:

கோமதி பள்ளிக்கு செல்லும்போதே விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். இதனால், எனது கணவர் சைக்கிளில் நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்வார். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போதே பல ஊர்களுக்கும் சென்று பல்வேறு போட்டிகளில் வென்றுள்ளார். வீடு முழுவதும் அவர் பெற்ற பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்களுமே நிரம்பியுள்ளன. இன்று கோமதி சாதனை புரிந்துள்ளதைக் காண அவரது தந்தை உயிரோடு இல்லை என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.   திருச்சியின் தங்கமங்கை கோமதியின் வெற்றியை அவரது சொந்த கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT