இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல்!

2-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 67 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது... 
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல்!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியைச் சேர்ந்த கே.எல். ராகுல் பொறுப்புடன் விளையாடி 88 ரன்கள் எடுத்துள்ளார்.

கேரளா - வயநாடு பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 340 ரன்கள் எடுத்தது. டக்கெட் 80 ரன்களும் ஜேக்ஸ் 63 ரன்களும் எடுத்தார்கள். வேகப்பந்துவீச்சாளர் சைனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இந்தியா ஏ அணியில் ஈஸ்வரன் 31 ரன்கள் எடுத்தார். பிறகு ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் - பிரியங் பஞ்சல் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ராகுல் 182 பந்துகளில் 88 ரன்களும் பஞ்சல் 141 பந்துகளில் 89 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். 2-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 67 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com