செய்திகள்

மூன்றாவது டெஸ்டை வென்றது இங்கிலாந்து: 2-1 எனத் தொடரைக் கைப்பற்றிய மே.இ. அணி

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

செயிண்ட் லுசியாவில் நடைபெற்ற 3-வது டெஸ்டில்,இங்கிலாந்து அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 3-ம் நாளின் முடிவில் அந்த அணி 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள்  எடுத்தது. ரூட் 111, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் அப்போது இருந்தது. 

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. ரூட் 122 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 3-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 485 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் 69.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. சேஸ் மட்டும் இதர வீரர்களை விடவும் சிறப்பாக விளையாடி 102 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் 40 ரன்கள் கூட எடுக்கவில்லை. 3-வது டெஸ்டை 232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றாலும் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஆண்டர்சன், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

3-வது டெஸ்டுக்கான ஆட்ட நாயகன் விருது வுட்டுக்கும் தொடர் நாயகன் விருது ரோச்சுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT