செய்திகள்

கத்தார் ஓபன்: எல்ஸி மெர்டென்ஸ் சாம்பியன்

தினமணி

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சிமோனா ஹலேப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் எல்ஸி மெர்டென்ஸ்.
 அண்மையில் நடைபெற்ற ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் தோற்ற சிமோனா நம்பர் ஒன் அந்தஸ்தை இழந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் எல்ஸி மெர்டென்ஸ்-சிமோனா மோதினர். முதல் செட்டை எல்சி 3-6 என்ற நிலையில் இழந்தார். பின்னர் போராடி 6-4, 6-3 என்ற சிமோனாவை வீழ்த்தினார். இதன் மூலம் வாழ்க்கையில் தனது முதல் வெற்றியை பெற்ற அவர், அரையிறுதியில் விம்பிள்டன் சாம்பியன் கெர்பரையும் வென்றிருந்தார் எல்ஸி.
 இறுதிச் சுற்றில் வாவ்ரிங்கா:
 ராட்டர்டாமில் நடைபெற்று வரும் ஏபிஎன் ஆம்ரோ உலக டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஸ்டேன் வாவ்ரிங்கா முன்னேறினார்.
 இடது மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நுழையும் முதல் இறுதிச் சுற்று இதுவாகும். முதல்நிலை வீரர் ஜப்பானின் கீ நிஷிகோரியை 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார் வாவ்ரிங்கா. மற்றொரு அரையிறுதியில் மொன்பில்ஸ் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டேனில் மெத்வதேவை வென்று இறுதிக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT