செய்திகள்

துளிகள்...

DIN

* கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து சர்ச்சில் பிரதர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் ஈஸ்ட் பெங்கால் பெற்று வந்த தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.
* சிஆர்பிஎப் வீரர்கள் மீதான புல்வாமா தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ரியல் காஷ்மீர் அணிக்கு எதிராக ஸ்ரீநகரில் ஐ-லீக் ஆட்டத்தில் பங்கேற்று ஆட மாட்டோம் என நடப்பு சாம்பியன் மினர்வா தெரிவித்திருந்த நிலையில், ரியல் காஷ்மீருக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் எனவும் எச்சரித்துள்ளது.
* ஐசிசி விதிகளை மீறி மைதானத்தில் செயல்பட்டதாக நியூஸிலாந்து வீரர் டிரென்ட் பெளல்ட், வங்கதேச வீரர் மமுத்துல்லா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபாரதம் விதித்து உத்தரவிட்டது.
* வரும் 2020-இல் கத்தாரில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க கடந்த 1983, 2011-இல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு அமைப்புக் குழு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
* வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேன் யெமகுச்சிக்கு வாய்ப்புள்ளது என ஜாம்பவான் மார்டன் ஃபிராஸ்ட் கூறியுள்ளார். பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் போட்டியில் உள்ள போதிலும், யெமகுச்சிக்கு கூடுதல் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT