செய்திகள்

இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்

DIN

வரும் ஒருநாள், டி20 தொடர்களில் விராட் கோலி அணியை சமாளிக்க தெளிவான செயல்திட்டம் உள்ளதாக ஆஸி. அணி கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸி.யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் பேஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரினேகேட்ஸ் அணியை பட்டம் வெல்லச் செய்த பின்ச் கூறியதாவது-
இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள், டி20 தொடர்களில் கோலி அணியை வெல்ல தெளிவான செயல்திட்டத்துடன் உள்ளோம். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது சற்று கவனத்துடன் ஆட வேண்டும். சிறிதளவு தவறினாலும், எங்கள் அணி தான் பாதிக்கப்படும்.
உள்ளூர் சூழலில் இந்திய அணி ஒருநாள் ஆட்டங்களில் சிறந்த அணியாக விளங்கும். அதனால் முழு நம்பிக்கையுடனும் தெளிவான ஆட்ட உத்தியை வகுத்துள்ளோம் என்றார் பின்ச்.
வரும் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டி20 ஆட்டம் தொடங்குகிறது. இரண்டாம் டி20 ஆட்டம் பெங்களூருவில் 27-ஆம் தேதி நடக்கிறது.
5 ஒரு நாள் ஆட்டங்கள் வரும் மார்ச் 2-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி, பின்னர் நாக்பூர், ராஞ்சி, மொஹாலி, தில்லியில் நடக்கிறது. 
வலுகுறைந்த ஆஸி. அணி:
அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீதான தடை மார்ச் மாதம் நிறைவடைகிறது. அவர்கள் இல்லாமல் ஏற்கெனவே பேட்டிங்கில் வலுகுறைந்த நிலையில், பிரதான பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் காயமடைந்து, இந்திய தொடரில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸி. அணிக்கு இரட்டை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
அதே நேரத்தில் நியூஸிலாந்தில்  2 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி தற்போது மீண்டும் அணியில் இணைவதால், இந்திய அணி பலம் கூடுதலாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT