ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன்: முதல் 2 வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை
ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன்: முதல் 2 வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு



மார்ச் 23 துவக்க ஆட்டத்தில் சிஎஸ்கே-ஆர்சிபி மோதல்
ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
மார்ச் 23-ஆம் தேதி நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
உலகிலேயே பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாக இந்தியன் ப்ரீமியர் லீக் திகழ்கிறது. கடந்த 11ஆவது சீசனில் மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நிகழாண்டு 12-ஆவது சீசன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த அட்டவணை முதல் 2 வாரங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஆட்டங்களின் அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் 2019 தேதிகளுக்கு பின் தெரியவரும். தேர்தல் தேதிகள் வெளியானவுடன், முதல் இரண்டு வாரங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, சீசனின் மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை, உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
மார்ச் 23 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 17 ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அப்போது 5 ஆட்டங்களையும், ஏனைய அணிகள் 4 ஆட்டங்களிலும் விளையாடும். கேபிடல்ஸ் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களையும், பெங்களூரு, வெளியூரில் 3 ஆட்டங்களையும் ஆடும். மீதமுள்ள அணிகள் சொந்த மைதானத்தில் 2, வெளியூரில் 2 ஆட்டங்களில் பங்கேற்கும்.

மார்ச் 23 முதல் ஏப். 5 வரை நடைபெறும் ஆட்டங்கள் அட்டவணை
மார்ச் 23. சனிக்கிழமை, மாலை, சிஎஸ்கே-ஆர்சிபி, சென்னை.
மார்ச் 24. ஞாயிற்றுக்கிழமை, மதியம், கேகேஆர்-எஸ்ஆர்எச், கொல்கத்தா.
மார்ச் 24. ஞாயிற்றுக்கிழமை, மாலை, மும்பை-தில்லி கேபிடல்ஸ், மும்பை.
மார்ச் 25. திங்கள்கிழமை, மாலை, ஆர்ஆர்-கிங்ஸ் லெவன், ஜெய்ப்பூர்.
மார்ச் 26. செவ்வாய்க்கிழமை, மாலை, தில்லி கேபிடல்ஸ்-சிஎஸ்கே, தில்லி.
மார்ச் 27. புதன்கிழமை, மாலை, கேகேஆர்-கிங்ஸ் லெவன், கொல்கத்தா.
மார்ச் 28. வியாழக்கிழமை, மாலை, ஆர்சிபி-மும்பை, பெங்களூரு.
மார்ச் 29. வெள்ளிக்கிழமை, மாலை, எஸ்ஆர்எச்-ஆர்.ஆர், ஹைதராபாத்.
மார்ச் 30. சனிக்கிழமை, மதியம், கிங்ஸ் லெவன்-மும்பை, மொஹாலி.
மார்ச் 30. சனிக்கிழமை, மாலை, தில்லி கேபிடல்ஸ்-கேகேஆர், தில்லி.
மார்ச் 31. ஞாயிற்றுக்கிழமை, மதியம், எஸ்ஆர்எச்-ஆர்சிபி, ஹைதராபாத்.
மார்ச் 31. ஞாயிற்றுக்கிழமை, மாலை, சிஎஸ்கே-ஆர்ஆர், சென்னை.
ஏப்.1, திங்கள்கிழமை, மாலை, கிங்ஸ் லெவன்-தில்லி கேபிடல்ஸ், மொஹாலி.
ஏப். 2, செவ்வாய்க்கிழமை, மாலை, ஆர்ஆர்-ஆர்சிபி, ஜெய்ப்பூர்.
ஏப். 3, புதன்கிழமை, மாலை, மும்பை-சிஎஸ்கே, மும்பை.
ஏப். 4. வியாழக்கிழமை, மாலை, தில்லி கேபிடல்ஸ்-எஸ்ஆர்எச், தில்லி.
ஏப். 5, வெள்ளிக்கிழமை, மாலை, ஆர்சிபி-கேகேஆர், பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com