தனிப்பட்ட குறிக்கோள்களை முன்வைத்து ஆடுவதில்லை: தினேஷ் கார்த்திக்

தனிப்பட்ட குறிக்கோள்களை முன்வைத்து ஆடுவதில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
தனிப்பட்ட குறிக்கோள்களை முன்வைத்து ஆடுவதில்லை: தினேஷ் கார்த்திக்


தனிப்பட்ட குறிக்கோள்களை முன்வைத்து ஆடுவதில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் நடக்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் மட்டுமே தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் தொடரின் அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும் இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்பில்லை. ரிஷப் பந்த் தான் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ தேர்வுக் குழு வட்டாரங்கள் கூறிவருகின்றன.
நியூஸிலாந்தில் அண்மையில் நடைபெற்ற டி20 தொடரில் ரன் சேஸின் போது, மூன்றாவது பந்தில் 1 ரன்னை எடுக்க தினேஷ் கார்த்திக் மறுத்ததே, அவரது இந்த நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நான் எப்போதுமே தனிப்பட்ட குறிக்கோள்களை முன்வைத்து ஆடுவதில்லை. மைதானத்தில் சிறப்பாக ஆடுவதே எனது எண்ணமாக இருக்கும். சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி அடைவேன். 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் வேறிடங்களுக்கு மாற்றப்படுவது குறிதது அவர் கூறுகையில், அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் ரசிகர்களின் ஆதரவை இழப்பேன். 60 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவுடன் ஆடுவது மிகுந்த உற்சாகத்தை தரும்.
கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசனில் நாங்கள் ஒரு அணியாக செயல்பட உள்ளோம். கடந்த முறை செய்த தவறுகளில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, அணியை கட்டமைத்துள்ளோம் என்றார் தினேஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com