முதல் ஒரு நாள் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து 

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
அபார சதம் அடித்த ஜோ ரூட்-ஜேஸன் ராய்.
அபார சதம் அடித்த ஜோ ரூட்-ஜேஸன் ராய்.


முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பார்படாஸில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.. தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்களை குவித்தது. 
கிறிஸ் கெயில் அதிரடி 12 சிக்ஸர்
தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 12 சிக்ஸர்கள், 3 பவுண்டரியுடன் 129 பந்துகளில் 135 ரன்களை விளாசினார். ஷேய் ஹோப் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 64 ரன்களையும், டேரன் பிரவோ 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 40 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3-74, பென் ஸ்டோக்ஸ் 3-37, கிறிஸ் வோக்ஸ் 2-59 விக்கெட்டுகளை சாய்த்தனர். 
361 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 364 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜேஸன் ராய்-ஜோ ரூட் அபார சதம்
தொடக்க வீரர் ஜேஸன் ராய் 3 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 85 பந்துகளில் 123 ரன்களையும், ஜோ ரூட் 9 பவுண்டரியுடன் 97 பந்துகளில் 102 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். கேப்டன் மொர்கன் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 65 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களையும் சேகரித்தனர்.
மே.இ.தீவுகள் தரப்பில் ஜேஸன் ஹோல்டர் 2-63 விக்கெட்டை சாய்த்தார். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

கிறிஸ் கெயில் புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெயில். 


அப்ரிடி 576 ஆட்டங்கள் மூலம் 476 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்திருந்தார். ஆனால் கிறிஸ் கெயில் 444 ஆட்டத்திலேயே 477 சிக்ஸர்களை விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஒரு நாள் ஆட்டங்களில் 276, டி20 ஆட்டங்களில் 103, டெஸ்ட் ஆட்டங்களில் 98 சிக்ஸர்கள் என மொத்தம் 477 சிக்ஸர்களை விளாசியுள்ளார் கெயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com