சதமடித்த விராட் கோலி படைத்த சாதனை!

அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.
சதமடித்த விராட் கோலி படைத்த சாதனை!

அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது.

ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

299 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார். மொத்தம் 112 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சில சாதனைகளைப் படைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலிக்கு இது 39-ஆவது சதமாகும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விராட் கோலிக்கு இது 5-ஆவது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஆஸி.யில் அதிக சதங்கள் அடித்த இதர நாட்டு வீரர்களில் குமார் சங்ககாரா மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்:

விராட் கோலி - 24 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் - 17 சதங்கள்
கிறிஸ் கெயில், திலகரத்ன தில்ஷன் - 11 சதங்கள்

அடிலெய்டில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விராட் கோலி குவித்த ரன்கள்:

டெஸ்ட்: 116, 22, 115, 141, 3 & 34
ஒருநாள்: 18, 15, 107, 104
டி20: 90*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com