இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள நியூஸிலாந்து தொடர் ஆட்டங்களின் இந்திய நேரம்: முழு விவரம்!

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. 5 ஒருநாள் ஆட்டங்களிலும் 3 டி20 ஆட்டங்களிலும் பங்கேற்கிறது...
இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள நியூஸிலாந்து தொடர் ஆட்டங்களின் இந்திய நேரம்: முழு விவரம்!

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரைக் கைப்பற்றியது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார். ஒருநாள் தொடரையும் 2-1 என இந்திய அணி வென்றது.

அடுத்ததாக இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. 5 ஒருநாள் ஆட்டங்களிலும் 3 டி20 ஆட்டங்களிலும் பங்கேற்கிறது. அதன் விவரம்:

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜனவரி 23, நேபியர் - இந்திய நேரம் காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
2-வது ஒருநாள்: ஜனவரி 26, மெளண்ட் மெளன்கானி - இந்திய நேரம் காலை 7.30 மணி
3-வது ஒருநாள்: ஜனவரி 28, மெளண்ட் மெளன்கானி - இந்திய நேரம் காலை 7.30 மணி
4-வது ஒருநாள்: ஜனவரி 31, ஹேமில்டன் - இந்திய நேரம் காலை 7.30 மணி
5-வது ஒருநாள்: பிப்ரவரி 3, வெல்லிங்டன் - இந்திய நேரம் காலை 7.30 மணி

டி20 தொடர்

முதல் டி20: பிப்ரவரி 6, வெல்லிங்டன் - இந்திய நேரம் மதியம் 12.30 மணி
2-வது டி20: பிப்ரவரி 8, ஆக்லாந்து - இந்திய நேரம் காலை 11.30 மணி 
3-வது டி20: பிப்ரவரி 10, ஹேமில்டன் - இந்திய நேரம் மதியம் 12.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com