ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் விதர்பா, செளராஷ்டிரா அணிகள்

ரஞ்சி கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு விதர்பா, செளராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் விதர்பா, செளராஷ்டிரா அணிகள்

ரஞ்சி கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு விதர்பா, செளராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நாக்பூரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் விதர்பா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது.
முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் 355 ரன்களையும், விதர்பா 629 ரன்களையும் எடுத்தன. 274 ரன்கள் பின்தங்கிய உத்தரகாண்ட் சனிக்கிழமை 152/5 ரன்களுக்கு தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது உத்தரகாண்ட். 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் விதர்பா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியில் உமேஷ் யாதவ் 5-23, ஆதித்ய சர்வேட் 5-55 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
செளராஷ்டிரா அபாரம்:
லக்னெளவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிர அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் இன்னிங்ஸில் உத்தரப்பிரதேசம் 385 ரன்களையும், செளராஷ்டிரா 208 ரன்களையும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் உ.பி. 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. செளராஷ்டிரா அணி 4 விக்கெட் இழப்புக்கு 372 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் ஹர்விக் தேசாய் அபாரமாக ஆடி 116 ரன்களை எடுத்தார். இந்திய நட்சத்திரம் சேதேஸ்வர் புஜாரா 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று செளராஷ்டிரா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
செளராஷ்டிரா-கர்நாடகா, விதர்பா-கேரளா மோதல்: அரையிறுதிச் சுற்றில் கர்நாடகா--செளராஷ்டிராவும், விதர்பா-கேரள அணிகளும் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com