ஆஸ்திரேலிய ஓபன்: நடப்பு சாம்பியன் பெடரர், ஏஞ்சலீக் கெர்பர், ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலீக் கெர்பர், மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினர். 
ஆஸ்திரேலிய ஓபன்: நடப்பு சாம்பியன் பெடரர், ஏஞ்சலீக் கெர்பர், ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலீக் கெர்பர், மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினர். 

அதே நேரத்தில் நடால், சிட்ஸிபாஸ், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டி, விட்டோலினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. தற்போது நான்காம் சுற்று போட்டிகள் நடைபெற்று
 வருகின்றன.

பெடரர் ஏமாற்றம்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 7-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்தார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை கிரீஸ் நாட்டு இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாûஸ எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பெடரர் 7-6, 6-7, 5-7, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியுற்றார். முதல் செட்டை இழந்த போதிலும், 20 வயது சிட்ஸிபாஸ் பின்னர் கடுமையாக போராடி 3 செட்களை தொடர்ந்து வென்றார். இதன் மூலம் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய கிரேக்க வீரர் என்ற பெயரைப் பெற்றார்.

அவர் ஸ்பெயினின் ராபர்டோ பட்டிஸ்டா அகுட்டுடன் மோதுகிறார். மரின் சிலிக்கை நான்காம் சுற்றில் வென்றார் ராபர்டோ.

மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனை ஏஞ்சலீக் கெர்பர் 0-6, 2-6 என்ற செட் கணக்கில் தரவரிசைப் பட்டியலில் இல்லாத அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்ஸிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். 

காலிறுதியில் நடால்

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடால் 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை பந்தாடி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ள நடால் தனது எதிர் தரப்பு வீரர்களை தயக்கமின்றி பந்தாடி வருகிறார். 

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கவீரர் பிரான்ஸஸ் டியாபோ 7-5, 7-6, 6-7, 7-5 என்ற நேர் செட்களில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் நடாலுடன் மோதுகிறார்.

விட்டோலினா, ஆஷ்லி பர்டி முன்னேற்றம்

ஆஸி. ஓபன் போட்டியின் நான்காம் சுற்றில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். அவரை வென்ற ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி, விட்டோலினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் ஆஷ்லி பர்டியிடம் 6-4, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். முதல் செட்டை ஷரபோவா வென்ற போதிலும், சுதாரித்த ஆஷ்லிபர்ட்டி அடுத்த 2 செட்களை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 10 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறும் முதல் ஆஸி. வீராங்கனை பர்டி ஆவார்.

மற்றொரு ஆட்டத்தில் இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா விட்டோவா 6-2, 6-1 என்ற கணக்கில் 17 வயது வீராங்கனை அமெரிக்காவின் அமன்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com