செய்திகள்

இந்தியாவுடனான தோல்வி எதிரொலி: இரு துணைக் கேப்டன்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் ஆஸி.

Raghavendran

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

ஜனவரி 24 முதல் 28 வரை முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1 முதல் 5 வரை கேனபெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் 2-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

சமீபத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்த நிலையில், இலங்கையுடனான வார்னே-முரளிதரன் கோப்பைக்கு பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் என 2 துணைக் கேப்டன்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செவ்வாய்கிழமை நியமித்துள்ளது. 

16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:

டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாங்னே, நாதன் லயன், கர்டிஸ் பேட்டர்ஸன், வில் புகோஸ்கி, மேட் ரென்ஷா, ஜை ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், பீட்டர் ஸிடில்.

16 பேர் கொண்ட இலங்கை அணி விவரம் பின்வருமாறு:

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணரத்னே, லாஹிரு திரிமண்னே, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, தனஞ்சய டீ சில்வா, ரோஷன் சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), குஷல் பெரேரா, தில்ருவன் பெரேரா, லக்ஷன் சண்டகன், சுரங்க லக்மல், லாஹிரு குமாரா, துஷ்மந்த சமீர, கஸுன் ரஜிதா. 

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:

டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோ பர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாங்னே, டிராவிஸ் ஹெட், கர்டிஸ் பேட்டர்ஸன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜை ரிச்சர்ட்ஸன், நாதன் லயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT