ஐசிசி ஆண்டின் டெஸ்ட், ஒரு நாள் அணிகளின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஐசிசி சார்பில் பல்வேறு நாடுகளின் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதே போல் 2018 ஆம் ஆண்டுக்கான அணிகளை அறிவித்துள்ளது ஐசிசி. இவற்றின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் அணியில் இந்தியா, இங்கிலாந்தின் தலா 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் டெஸ்ட் அணியில் மூன்று இந்திய வீரர்கள், நியூஸிலாந்து வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அணிகள் விவரம்-
ஐசிசி டெஸ்ட் அணி:
விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த், ஜஸ்ப்ரீத் பும்ரா, (இந்தியா), டாம் லத்தம், கேன் வில்லியம்ஸன், ஹென்றி நிக்கோல்ஸ் (நியூஸிலாந்து), திமுத் கருணாரத்னே (இலங்கை), ஜேஸன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்), ரபாடா (தென்னாப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்).
ஐசிசி ஒரு நாள் அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோவ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), முஸ்தபிஸுர் ரஹ்மான் (வங்கதேசம்).