நியூ​ஸி​லாந்​து-​இந்​தியா இடையே இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்

நி​யூ​ஸி​லாந்​து-​இந்​திய அணி​க​ளுக்கு இடை​யி​லான முதல் ஒரு​நாள் ஆட்டம் நேப்​பி​யர் மெக்​லீன் பூங்கா மைதா​னத்​தில் புதன்​கி​ழமை நடை​பெ​று​கி​றது,
நியூ​ஸி​லாந்​து-​இந்​தியா இடையே இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்


நி​யூ​ஸி​லாந்​து-​இந்​திய அணி​க​ளுக்கு இடை​யி​லான முதல் ஒரு​நாள் ஆட்டம் நேப்​பி​யர் மெக்​லீன் பூங்கா மைதா​னத்​தில் புதன்​கி​ழமை நடை​பெ​று​கி​றது, ஆஸி. மண்​ணில் பெற்ற வெற்​றியை இங்​கும் பெறுமா இந்​தியா என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.
ஆஸ்​தி​ரே​லிய சுற்​றுப்​ப​ய​ணத்​தில் டெஸ்ட், மற்​றும் ஒரு நாள் தொடர்​களை தலா 2-1 என முதன்​மு​றை​யாக கைப்​பற்றி வர​லாறு படைத்​தது இந்​தியா. 
உல​கக் கோப்பை போட்டி 2019-இக்கு தயா​ரா​கும் வகை​யில் இங்​கி​லாந்து மைதா​னங்​க​ளின் தன்மை, சூழல் உடைய நியூ​ஸி​லாந்​தில் 5 ஆட்டங்​கள் கொண்ட ஒரு​நாள் மற்​றும் 3 ஆட்டங்​கள் கொண்ட டி20 தொ​டர்​க​ளில் இந்​திய அணி ஆடு​கி​றது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்​பி​ய​ரில் தொடங்​கு​கி​றது.
​தொ​ட​ரும் மிடில் ஆர்​டர் சிக்​கல்:​
இந்​திய ஒரு நாள் அணி​யில் தொடக்க வரிசை ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விரோட் கோலி​யு​டன் வலு​வாக உள்​ளது, 
எனி​னும் ஷிகர் தவன் ஆட்டத்​தி​றன் கேள்​விக்​கு​றி​யாக உள்​ளது. 9 ஆட்டங்​க​ளில் அவ​ரது அதி​க​பட்ச ஸ்கோர் 35 மட்டுமே ஆகும்.
இளம் வீரர் ஷுப்​மன் கில் பதிலி தொடக்க வீர​ராக உள்​ளார்.
4, 5, மற்​றும் 6-ஆம் நிலை பேட்ஸ்​மேன்​கள் ஆடும் மிடில் ஆர்​டர் நிலை​யில்​லா​மல் உள்​ளது. இதில் மூத்த வீரர் தோனி மட்டுமே தற்​போது பார்​மில் உள்​ளார். 
அம்​பதி ராயு​டு​வை​யும் அணி நிர்​வா​கம் நம்​பி​யுள்​ளது. மேலும் கேதர் ஜாதவ் அல்​லது தினேஷ் கார்த்​திக்​கும் மிடில் ஆர்​டர் வரி​சை​யில் இடம் பெற வாய்ப்​புள்​ளது.
​சி​றிய மைதா​னங்​கள்: 
அபார வேகப்​பந்​து​வீச்​சு​
நியூ​ஸி​லாந்​தில் உள்ள கிரிக்கெட் மைதா​னங்​கள் பொது​வாக சிறி​ய​வை​யாக உள்​ளன. மேலும் நியூஸி. அணி​யில் டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, லாக்கி பெர்​கு​ஸன் உள்​ளிட்ட அபா​ய​க​ர​மான சிறந்த வேகப்​பந்து வீச்​சா​ளர்​கள் உள்​ள​னர். இந்​திய அணி​யைப் போல் சொந்த மண்​ணில் நியூஸி. அணி​யும் சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​ப​டுத்தி வரு​கி​றது.
நேப்​பி​ய​ரில் நடை​பெ​றும் முதல் ஆட்டம் கடும் வெப்​ப​ம​ய​மான சூழ​லில் நடக்​கி​றது. 
சிறந்த பந்​து​வீச்​சைப் போல், நியூ​ஸி​லாந்து அணி​யில் பேட்டிங் வரி​சை​யும் வலு​வாக உள்​ளது. குறிப்​பாக தொடக்க வீரர்​கள் மார்ட்​டின் கப்​டில், டாம் லத்​தம், ராஸ் டெய்​லர், கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸன், காலின் மன்றோ ஆகி​யோர் அதி​ரடி வீரர்​க​ளாக திகழ்​கின்​ற​னர். 
இந்​திய பந்​து​வீச்​சும் வலு​வா​கவே உள்​ளது. பிர​தான பந்​து​வீச்​சா​ளர் ஜஸ்ப்​ரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு தரப்​பட்​டுள்​ளது. புவ​னேஸ்​வர் குமார், முக​மது ஷமி ஆகி​யோ​ருக்கு துணை​யாக மூன்​றாம் வேகப்​பந்து வீச்​சா​ள​ராக கலீல் அக​மது, முக​மது சிராஜ் ஆகிய ஒரு​வர் இடம் பெறு​வார். 
குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா, சஹல் ஆகி​யோர் சுழற்​பந்து வீச்​சில் தங்​கள் பங்கை ஆற்​று​வர்.
அதே நேரத்​தில் இளம் வீரர் ரிஷப் பந்த் இங்​கி​லாந்து லயன்ஸ்-​இந்​திய ஏ அ​ணி​க​ளுக்கு இடை​யி​லான தொட​ரில் பங்​கேற்​கி​றார். 
 

கேன் வில்​லி​யம்​ஸன், ராஸ் டெய்​லரை அவுட் செய்​வ​தில் கவ​னம்: கோலி 
நியூ​ஸி​லாந்து அணி உல​கின் மூன்​றா​வது சிறந்த அணி​யாக உள்​ளது. அவர்​க​ளது பலம், பல​வீ​னங்​களை அறிந்​துள்​ளோம். எனி​னும் சொந்த மண்​ணில் அவர்​களை எதிர்​கொள்​வது கடி​ன​மா​கும். இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பே இந்​தி​யா​வில் அவர்​கள் சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​ப​டுத்​தி​னர். வெற்றி பெறக்​கூ​டிய சக்தி அந்த அணிக்கு உள்​ளது. மேலும் சரி​யான வகை​யில் கிரிக்​கெட்டை அவர்​கள் ஆடி வரு​கின்​ற​னர். கேன் வில்​லி​யம்​ஸன், ராஸ் டெய்​லர் ஆகி​யோர் விரை​வாக அவுட் செய்​வ​தில் கவ​னம் செலுத்​து​வோம். ஏனைய வீரர்​கள் மீதும் சிறப்பு கவ​னம் செலுத்​து​வோம்.


​கோ​லியை கட்டுப்​ப​டுத்​த முயற்சிப்போம் : நியூஸி கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸன்:
​இ​லங்​கை​யு​டன் நடை​பெற்ற ஒரு நாள் தொட​ரில் நாங்​கள் செய்த தவ​று​க​ளில் இருந்து பாடம் கற்​றுள்​ளோம். அத்​தொ​டரை முழு​மை​யாக கைப்​பற்​றி​னா​லும்,, இந்​தி​யா​வு​டன் சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​ப​டுத்​து​வோம், கேப்​டன் கோலியை எவ்​வாறு கட்டுப்​ப​டுத்​து​வது என்​ப​தில் தனி கவ​னம் செலுத்​து​வோம். உல​கின் சிறந்த வீரர்​க​ளில் ஒரு​வ​ராக உள்​ளார் கோலி. மெக்​லீன் மைதா​னம் பேட்டிங்​குக்கு சாத​க​மாக இருக்​கும். பெளலர்​க​ளுக்​கும் அதிக வேலை காத்​துள்​ளது என்​றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com