டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச்சுற்று ஆட்டம்: இத்தாலியை வெல்லுமா இந்தியா?

வலுவான இத்தாலிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச்சுற்று ஆட்டம்: இத்தாலியை வெல்லுமா இந்தியா?

வலுவான இத்தாலிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  போட்டி புல்தரை மைதானத்தில் நடப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கும் எனக்கருதப்படுகிறது. 
ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தனிநபர்களுக்கு உள்ளது போல், பல்வேறு நாடுகளின் அணிகளுக்கு டேவிஸ் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) சார்பில் டேவிஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அணியும் டென்னிஸ் உலகில் பல சிறப்புகளை பெற்றுள்ளது. குறிப்பாக ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், அமிர்தராஜ் சகோதரர்கள், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் தேவ்வர்மன், சானியா மிர்ஸா, தற்போதுள்ள ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், போபண்ணா, திவிஜ் சரண், அங்கிதா, கர்மன் கெளர் என வீரர், வீராங்கனைகள் இந்திய அணியின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த 1921 முதல் இந்திய அணி டேவிஸ் கோப்பை போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. 1966, 1974, 1987-ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடம் பெற்றது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள உலகப் பிரிவு ஆட்டங்களில் தலா 10 வெற்றி, தோல்விகளை இந்தியா பெற்றுள்ளது. 
கடந்த 2018-ஆம் ஆண்டில் சீனாவை 3-2 என வென்றது. அதே நேரத்தில் செர்பியாவிடம் 0-4 என தோல்வியுற்றது. இதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 1, 2 தேதிகளில் கொல்கத்தாவில் பலம் வாய்ந்த இத்தாலிக்கு எதிராக உலகப்பிரிவு தகுதிச் சுற்று ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணியில் முதல்நிலை வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், ரோஹன் போபண்ணா, சாகேத் மைனேனி, சசிகுமார் முகுந்த். அணியின் விளையாடாத கேப்டனாக மகேஷ் பூபதி உள்ளார்,.
மகேஷ் பூபதி கடந்த 2017-இல் ஆனந்த் அமிர்தராஜிடம் இருந்து கேப்டன் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்தியா இருமுறை உலகபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
வலுவான இத்தாலி:
அதே நேரத்தில் இத்தாலி வலுவான அணியாகத் திகழ்கிறது. உலகின் 13-ஆம் நிலை வீராங்கனை ஃபேபியோ போகினி தலைமையில் அந்த அணி களமிறங்குகிறது. ஆன்ட்ரெஸ் சிப்பி, சைமோன் பொலேலி, பாவ்லோ லோரென்ஸி, மட்டியோ பிரெட்டினி,
இத்தாலி கடந்த 1976-இல் கோப்பை வென்றது. 6 முறை இரண்டாம் இடம் பெற்றது.  உலகத் தரவரிசையில் அனைத்து வீரர்களும் முதல் 100 இடங்களில் உள்ளனர். 
கொல்கத்தா செளத் கிளப்:
வரும் பிப்ரவரி மாதம் 1, 2 தேதிகளில் கொல்கத்தா செளத் கிளப் மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி களிமண் தரையில் இல்லாமல், புல்தரை மைதானத்தில் நடக்கிறது. இது இந்திய அணிக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். 
ராம்குமார் ராமநாதன், பிரஜேஷ் குணேஸ்வரன் ஆகியோர் புல்தரை மைதானத்தில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
இத்தாலி அணியோ களிமண் தரையில் சிறந்து விளங்குகிறது.   
இரட்டையர் பிரிவில் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜகார்த்தா ஆசியப் போட்டியின் போதே, போபண்ணாவுடன் ஆட முடியாததால் அவர் அணியில் இருந்து விலகினார். தி விஜ்சரண்-போபண்ணா ஆகியோர் இணைந்து ஆடினர். பயஸ்-போபண்ணா இணைந்து ஆடினால் இரட்டையர் பிரிவில் எளிதாக வெற்றியை பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது.
உலகக் குழு பைனல்ஸ்க்கு தகுதி பெற வாய்ப்பு:
இத்தாலி-இந்திய அணிகள் இடையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணி முதன்முறையாக வரும் நவம்பர் மாதம் மாட்ரிட்டில் நடைபெறவுள்ள உலகக் குழு பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com