டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா!

முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தானும் இந்தியா - தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன... 
ICC T20 World Cup 2020 full schedule
ICC T20 World Cup 2020 full schedule

2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

டி20 ஆடவர் உலகக் கோப்பையில் ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால், 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள், 6 இதர அணிகளுடன் தகுதிச்சுற்றில் போட்டியிட வேண்டும். அதிலிருந்து நான்கு அணிகள் தேர்வாகவுள்ளன. 2020-ம் ஆண்டு அக்டோபர் 18 முதல் 23 வரை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன.

குரூப் ஏ அணியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து மற்றும் தகுதி பெறும் இரு அணிகள் என 6 அணிகளும் குரூப் பி அணியில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி பெறும் இரு அணிகள் என 6 அணிகளும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானும் இந்தியாவும் தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ளதால் ஒரே பிரிவில் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. இதனால் லீக் சுற்று ஆட்டங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் வாய்ப்பு அமையும்பட்சத்தில்  அரையிறுதி அல்லது இறுதி ஆட்டங்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக மோத முடியும். 

2020-ம் ஆண்டு அக்டோபர் 24 முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தானும் இந்தியா - தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. 

ஆடவர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 11, 12 தேதிகளில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 15 அன்று நடைபெறவுள்ளது.

ஆடவர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்

அக்டோபர் 24: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
அக்டோபர் 29: இந்தியா vs தகுதி பெறும் அணி (ஏ2)
நவம்பர் 1: இந்தியா vs இங்கிலாந்து
நவம்பர் 5: இந்தியா vs தகுதி பெறும் அணி (பி1)
நவம்பர் 8: இந்தியா vs ஆப்கானிஸ்தான்

ஆடவர் டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நாடுகள்

2007: இந்தியா
2009: பாகிஸ்தான்
2010: இங்கிலாந்து
2012: மேற்கிந்தியத் தீவுகள்
2014: இலங்கை
2016: மேற்கிந்தியத் தீவுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com