செய்திகள்

இரு அணிகளுக்கும் கூட்டாக கோப்பையை ஐசிசி தந்திருக்க வேண்டும்: நியூஸி. பயிற்சியாளர் கேரி ஸ்டெட்

DIN


இரு அணிகளுக்கும் கூட்டாக கோப்பையை ஐசிசி பகிர்ந்து தந்திருக்க வேண்டும் என நியூஸி. பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த அணி முதன்முறையாக கோப்பை வாங்கியது. ஐசிசியின் பவுண்டரி விதிமுறைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விதியை மறு ஆய்வு செய்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கேரி ஸ்டெட் மேலும் கூறியதாவது-
இரு அணிகளையும் கூட்டு சாம்பியன்களாக அறிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து 7 வாரங்கள் ஆடி வரும் நிலையில், இறுதி ஆட்டத்தில் மட்டும் பிரிக்க முடியாது. அனைத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். 
நியூஸி பேட்டிங் பயிற்சியாளர் கிரெய்க் மேக்மில்லனும், இரு அணிகளையும் கூட்டு சாம்பியன்களாக அறிவித்து இருக்க வேண்டும் என்பதை ஆமோதித்தார். இரு அணிகளும் எந்த வகையிலும் சளைக்காமல் ஆடின. ஆனால் பவுண்டரி விதியின்படி கோப்பையை இங்கிலாந்துக்கு தந்து விட்டனர். 
ஒரு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறை சிறந்ததா என்பதை ஐசிசி ஆய்வுக் உள்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT