செய்திகள்

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஐசிசி கௌரவிப்பு

Raghavendran

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் 6-ஆவது இந்தியரானார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

பல தலைமுறைகளாக கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். மேலும் இந்த விளையாட்டை பிரபலமடையச் செய்தவர்கள். இதில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதன் மூலம் நான் கௌரவிக்கப்பட்டுள்ளேன். 

எனது இந்த நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது பெற்றோர்கள், சகோதரர் அஜித், மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அதிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் போன்ற ஒரு குருவைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி தான்.

கிரிக்கெட்டை நான் ரசித்து விளையாட உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட், பிசிசிஐ, சக வீரர்கள் மற்றும் என்னை வழிநடத்திய கேப்டன்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது கிரிக்கெட்டைப் பாரட்டிய ஐசிசி-க்கும் நன்றி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட்டும் மேலும் வளரும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT