ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்

கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைக்காக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸி வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்

கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைக்காக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸி வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்-ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கெளரவம். பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அதில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவரும் கிரிக்கெட்டின் வளர்ச்சி, பிரபலம் அடைவதற்காக பாடுபட்டுள்ளனர். நானும் எனது பங்குக்கு சிறிது செய்துள்ளேன். 

கிரிக்கெட்டின் பிதாமகன் எனக் கூறப்படும் டான் பிராட்மேனுக்கு ஈடாக கருதப்படும் சச்சின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 34357 ரன்களை எடுத்துள்ளார். 100 சர்வதேச சதங்களை அடித்தவர். கடந்த 2013-இல் ஓய்வு பெற்றார் சச்சின். 

ஏற்கெனவே ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் ஹால் ஆஃப் பேமில் இடம் பெற்றுள்ளனர்.

ஆலன் டொனால்ட்: தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டொனால்ட் 330 டெஸ்ட், 272 ஒரு நாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2003-இல் அவர் ஓய்வு பெற்றார். 

கேத்ரீன் பிட்ஸ்பேட்ரிக்: 2 முறை உலகக் கோப்பை வென்ற ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான கேத்ரின் 180 ஒருநாள் விக்கெட்டுகள், 60 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மேலும் ஆஸி. அணியின் பயிற்சியாளராக இருந்து 3 முறை கோப்பை வெல்ல உதவியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com