காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இப்போட்டியின் அணிகள் பிரிவு இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மகளிர் பிரிவில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 3-0 என்ற செட் கணக்கில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அர்ச்சனா காமத் 8-11, 13-11, 11-9, 11-9 என ஹோ டின்னையும், மனிகா பத்ரா 11-6, 11-4, 11-3 என டெனிஸ் பேயட்டையும், மதுரிகா 11-9, 11-7, 11-6 என எமிலி போல்டனையும் வீழ்த்தி மொத்தத்தில் 3-0 என வென்றனர்.

ஆடவர் பிரிவில் இந்தியா 3-2 என போராடி இங்கிலாந்தை வீழ்த்தியது. சரத் கமல் 7-11, 8-11, 4-11 என தாமஸ் ஜார்விஸடம் தோற்றார். அதே போல் சத்யன் 11-5, 11-9, 4-11, 8-11, 8-11 என சாமுவேல் வாக்கரிடம் போராடி தோல்வியுற்றார். பின்னர் முக்கியமான ஆட்டத்தில் ஹர்மித் தேசாய் 4-11, 11-5, 8-11, 11-8, 11-8 என டேவிட்டை வீழ்த்தினார். மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சத்யன் 11-2, 6-11, 11-4, 11-4 என தாமûஸயும், சரத் கமல் 15-13, 12-10, 11-6 என சாமுவேலையும் வீழ்த்தி 3-2 என ஆட்டத்தை கைப்பற்றினர்.

இந்திய ஆடவர் அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் மகளிர் அணி முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

இதன் தொடர்ச்சியாக தனி நபர் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com