செய்திகள்

தன்னடக்க தோனி: தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க மறுப்பு!

எழில்

மும்பை வான்கடே ஸ்டியேயத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும், தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லாவில் சேவாக் கேட்டும் உள்ளதுபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள பெவிலியன் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2017-ல் நடந்த நிர்வாகக் கூட்டத்தில், வடக்கு பிளாக் ஸ்டாண்ட் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று கூறுகிறார் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி. தோனி பெவிலியனைத் திறந்து வைக்க தோனியை அழைத்தோம். ஆனால், நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என்னுடைய வீட்டை நானே திறந்துவைப்பதா எனத் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார். 

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் ஆட்டம் இது என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கென விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT