இவன் மனிதன் தானா?: மிரள வைக்கும் விராட் கோலியின் 41-வது சதமும் அதன் சாதனைகளும்!

2017-க்குப் பிறகு அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை, சில முக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த சதங்களை விடவும் அதிகமாக உள்ளது...
இவன் மனிதன் தானா?: மிரள வைக்கும் விராட் கோலியின் 41-வது சதமும் அதன் சாதனைகளும்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோலியின் சதமும் வீணானது. 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹலியில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் தனது 41-வது சதத்தை எடுத்துள்ள விராட் கோலி, அதன் மூலம் மிரள வைக்கும் சாதனைகளைப் படைத்துள்ளார். 2017-க்குப் பிறகு அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை, சில முக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த சதங்களை விடவும் அதிகமாக உள்ளது!

விராட் கோலியின் சதம்...

41-வது ஒருநாள் சதம் 
66-வது சர்வதேச சதம் 
19-வது, ஒருநாள் கேப்டனாக 
37-வது, கேப்டனாக அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும்

அதிக ஒருநாள் சதங்கள் 

49 சச்சின் டெண்டுல்கர் (452 இன்னிங்ஸ்) 
41 விராட் கோலி (217 இன்னிங்ஸ்) 
30 ரிக்கி பாண்டிங் (365 இன்னிங்ஸ்)

41-வது ஒருநாள் சதம்

சச்சின் - 369 இன்னிங்ஸ்
விராட் கோலி - 217 இன்னிங்ஸ்

225 ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு அதிக சதங்கள் 

41 விராட் கோலி
27 ஹசிம் ஆம்லா (174 ஒருநாள் ஆட்டங்கள்)
25 டி வில்லியர்ஸ்
23 டெண்டுல்கர்
22 ரோஹித் சர்மா
21 கங்குலி

2017 முதல் ஒருநாள் சதங்கள்

விராட் கோலி 15
தென் ஆப்பிரிக்கா 15
பாகிஸ்தான் 14
வங்கதேசம் 13
மே.இ. அணி 12
இலங்கை 10

விராட் கோலியின் 40 ஒருநாள் சதங்கள்

8 vs ஆஸ்திரேலியா, இலங்கை 
7 vs மே.இ. 
5 vs நியூஸிலாந்து 
4 vs தென் ஆப்பிரிக்கா 
3 vs இங்கிலாந்து, வங்கதேசம் 
2 vs பாகிஸ்தான் 
1 vs ஜிம்பாப்வே

இந்தியாவில் விராட் கோலியின் கடைசி 50+ ஸ்கோர்கள்

121 113 140 157* 107 116, 123. இந்தியாவில் கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்துள்ளார் கோலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்

9 சச்சின் டெண்டுல்கர் (70 இன்னிங்ஸ்) 
8 விராட் கோலி (32 இன்னிங்ஸ்) 
7 ரோஹித் சர்மா (34 இன்னிங்ஸ்) 

* மூன்று வெவ்வேறு அணிகளுடன் 7 அல்லது அதற்கும் அதிகமான ஒருநாள் சதங்கள் எடுத்த ஒரே வீரர் - விராட் கோலி;  vs ஆஸ்திரேலியா (8), vs இலங்கை (8), vs மே.இ. அணி (7).

* இலக்கை விரட்டும்போது விராட் கோலி அடித்த 25-வது ஒருநாள் சதம் இது. அதில், இலக்கை விரட்டும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் ஆறு சதங்கள் எடுத்துள்ளார். வேறு எந்த வீரரும் வேறு எந்த அணிக்கும் எதிராக இத்தனை சதங்கள் அடித்ததில்லை. 

உள்ளூரில் ஓர் அணிக்கு எதிராக எடுத்த அதிக சதங்கள்

5 - அரோன் ஃபிஞ்ச் vs இங்கிலாந்து 
5 - ஆடம் கில்கிறிஸ்ட் vs இலங்கை 
5 - விராட் கோலி vs மே.இ. அணி 
5 - ரிக்கி பாண்டிங் vs நியூஸிலாந்து 
5 - விராட் கோலி vs ஆஸ்திரேலியா

உள்ளூரில் எடுத்த அதிக சர்வதேச சதங்கள்

42 - சச்சின் டெண்டுல்கர்
36 - ரிக்கி பாண்டிங்
30 - ஹசிம் ஆம்லா, விராட் கோலி
29 - காலிஸ்
27 - ஜெயவர்தனே

ஒருநாள் ஆட்டத்தில் எதிரணிக்கு எதிராக எடுத்த அதிக சதங்கள்

9 - சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா
8 - விராட் கோலி vs இலங்கை
8 - சச்சின் டெண்டுல்கர் vs இலங்கை
8 - விராட் கோலி vs ஆஸ்திரேலியா

4000 ஒருநாள் ரன்களை விரைவாக எடுத்த கேப்டன்கள்

63 இன்னிங்ஸ் - விராட் கோலி
77 இன்னிங்ஸ் - டி வில்லியர்ஸ்
100 - தோனி
103- கங்குலி
106 - ஜெயசூர்யா

300+ ரன்களை விரட்டும்போது கோலி எடுத்த சதங்கள் 

107 vs இலங்கை, கொல்கத்தா (2009) 
133* vs இலங்கை, ஹோபர்ட் (2012) 
183 vs பாகிஸ்தான், மிர்புர் (2012) 
115* vs ஆஸ்திரேலியா, நாக்பூர் (2013) 
100* vs ஆஸ்திரேலியா, ஜெய்பூர் (2013) 
106 vs ஆஸ்திரேலியா, கேன்பெரா (2016) தோல்வி 
122 vs இங்கிலாந்து, புணே (2017) 
140 vs மே.இ., குவாஹாட்டி (2018) 
123 vs ஆஸ்திரேலியா, ராஞ்சி (2019) தோல்வி

(அடுத்ததாக, குமார் சங்கக்காராவும் ஜேஸன் ராயும் 300+ ரன்களை விரட்டிய ஆட்டங்களில் தலா 4 ஒருநாள் சதங்கள் எடுத்துள்ளார்கள்.) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com