ஐபிஎல் 2019: கடந்த சீசனைப் போலவே தற்போதும் அச்சமின்றி விளையாடுவோம்- ஹர்பஜன் சிங்

கடந்த சீசனைப் போலவே தற்போதும் அச்சமின்றி விளையாடுவோம் என சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடக்க ஆட்டம் வரும் 23-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:
சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும். கடந்த 10 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீசிய போது, வாங்கடே மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இல்லை. கடந்த 2001-இல் சேப்பாக்கத்தில் ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்டில் 15/217 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினேன்.
சென்னை மைதானம் எனக்கு பிடித்தமானது. ஞாயிற்றுக்கிழமை பயிற்சி ஆட்டத்துக்கே 12000 ரசிகர்கள் குவித்தனர். இதுபோன்ற ஆதரவை எங்கும் காணவில்லை.
ஒரே குழுவாக நாங்கள் இணைந்து ஆடுவதால் அணியின் வெற்றி சாத்தியமாகிறது என்றார் ஹர்பஜன்.
தில்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும்: தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என மூத்த வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற தவன் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் எந்த அணி பட்டம் வென்றாலும், அது சரியான விகிதத்தில் அமைக்கப்பட்ட அணியாக இருக்கும். 
குல்தீப் திறமையால் முன்னேறினார்: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் தனது திறமையால் தான் முன்னேறினார். வேறு மர்மம் எதுவுமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூத்த வீரர் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். சென்னை, மார்ச் 18: கடந்த சீசனைப் போலவே தற்போதும் அச்சமின்றி விளையாடுவோம் என சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடக்க ஆட்டம் வரும் 23-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:
சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும். கடந்த 10 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீசிய போது, வாங்கடே மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இல்லை. கடந்த 2001-இல் சேப்பாக்கத்தில் ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்டில் 15/217 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினேன்.
சென்னை மைதானம் எனக்கு பிடித்தமானது. ஞாயிற்றுக்கிழமை பயிற்சி ஆட்டத்துக்கே 12000 ரசிகர்கள் குவித்தனர். இதுபோன்ற ஆதரவை எங்கும் காணவில்லை.
ஒரே குழுவாக நாங்கள் இணைந்து ஆடுவதால் அணியின் வெற்றி சாத்தியமாகிறது என்றார் ஹர்பஜன்.
தில்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும்: தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என மூத்த வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற தவன் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் எந்த அணி பட்டம் வென்றாலும், அது சரியான விகிதத்தில் அமைக்கப்பட்ட அணியாக இருக்கும். 
குல்தீப் திறமையால் முன்னேறினார்: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் தனது திறமையால் தான் முன்னேறினார். வேறு மர்மம் எதுவுமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூத்த வீரர் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com