2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி

ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டில் சூதாட்டப் புகாரில் சிக்கியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்களான நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்று அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி
2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி


ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டில் சூதாட்டப் புகாரில் சிக்கியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்களான நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்று அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தத் தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. விசாரணை முடிவில் சிஎஸ்கே அணிக்கும், சூதாட்டப் புகாரில் சிக்கிய மற்றொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வந்த தோனி, ஹாட்ஸ்டார் இணையதளம் தயாரித்துள்ள ஆவணப்படத்தில் இந்த விவகாரத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 2013ஆம் ஆண்டு எனது வாழ்க்கையின் மோசமான காலகட்டமாக கருதுகிறேன். அதற்கு முன்பு நான் எதற்கும் மிக அதிகமாக மன உலைச்சலுக்கு ஆளானதில்லை. அதற்கு முன்பு 2007 உலகக் கோப்பை தொடரில் குழு பிரிவு சுற்றில் இந்திய அணி ஆட்டமிழந்து வெளியேறியபோது அதிக மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அதற்கும், ஐபிஎல் தொடருக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
2007 ஆம் ஆண்டில் இந்திய அணியினர் சரியாக விளையாடாததால் நாம் ஆட்டமிழந்தோம். ஆனால், ஐபிஎல் தொடர் வேறு மாதிரியானவை. மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று மக்கள் நாடு முழுவதும் பேசத் தொடங்கினர். ஆனால், நாங்கள் (அணி வீரர்கள்) என்ன தவறு செய்தோம்?
இறுதியில் 2 ஆண்டு தடையை அனுபவித்தது சிஎஸ்கே. அப்போது, செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். நிர்வாகத் தரப்பில் தவறு நிகழ்ந்ததை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வீரர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
எனது பெயர் கூட அந்த சமயத்தில் அடிபட்டது.
வீரர்களால் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முடியுமா? என்றால் முடியும், வாய்ப்பு உள்ளது என்றே கூறுவேன். ஏன், நடுவரால் கூட முறைகேடு செய்ய முடியும்.  எனினும், ஒரு ஆட்டத்தில் முறைகேடு செய்ய வேண்டுமானால் அதிக எண்ணிக்கையிலான வீரர்களின் பங்கு இருக் க வேண்டும். 
என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட் தான் எனக்கு எல்லாம். நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் கிரிக்கெட் தான்.
பல சாதனைகளை புரிந்திருப்பதும் கிரிக்கெட்டால் தான். கொலையை விட மிகப் பெரிய குற்றமாக மேட்ச் ஃபிக்ஸிங்கை கருதுகிறேன் என்று தோனி விளக்கம் அளித்துள்ளார். தடைகாலம் முடிந்த கடந்த ஆண்டு களம் இறங்கிய சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com