கம்பீர் கருத்து: கோலி பதிலடி

ஐபிஎல் போட்டியில் பட்டம் வெல்லாத கேப்டன் என கம்பீர் கூறியதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி பதிலடி தந்துள்ளார்.
கம்பீர் கருத்து: கோலி பதிலடி


ஐபிஎல் போட்டியில் பட்டம் வெல்லாத கேப்டன் என கம்பீர் கூறியதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி பதிலடி தந்துள்ளார்.
கோலியையும், தோனியையும் ஓரே அளவில் வைத்து பார்க்கக் கூடாது. தோனி 3 முறை ஐபிஎல் பட்டங்களை வென்றவர். அதே நேரத்தில் கோலி ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. மேலும் ரோஹித் சர்மா வசமும் 3 ஐபிஎல் பட்டங்கள் உள்ளன. 
ஒருமுறை கூட பட்டம் வெல்லாத நிலையிலும் பெங்களுரு அணியின் கேப்டனாக கோலி நீடித்து வருவது அதிர்ஷடமாகும் எனக்கூறியிருந்தார். இதுசர்ச்சையை ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக கோலி சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது நோக்கம் தான். என்னால் முடிந்ததை செய்கிறேன். ஐபிஎல் வெற்றி மூலம் தான் என்னைப் பற்றி ஒருவர் அனுமானிக்கிறார் என்பது குறித்து கவலைப்பட மாட்டேன். 
அனைத்து பட்டங்களையும் வெல்லவே முனைகிறேன். சில நேரங்களில் நெருக்கடியான நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. 6 அரையிறுதி ஆட்டங்களில் நாங்கள் ஆடியுள்ளோம் என்பதே எங்கள்திறமைக்கு சான்றாகும்.
சிறந்த முடிவுகளை எடுத்தால் மேலும் வெற்றி பெறலாம். வெளியில் இருந்து எதையாவது நினைக்காமல் நான் வீட்டினுள் இருந்தே செயல்படுவேன் என்றார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com