மியாமி ஓபன்: ஜோகோவிச், ஒஸாகா முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நவோமி ஒஸாகா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நவோமி ஒஸாகா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரர் பெர்னார்ட் டோமிக்கை வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரர் டொமினிக் தீம் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போலந்து வீரர் ஹூபர்ட்டிடம் வீழ்ந்தார். ஜப்பான் வீரர் நிஷிகோரியும் தனது ஆட்டத்தில் 
தோல்வியுற்றார்.
மகளிர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா 6-0, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் யானினாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் 6-3, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ரெபக்காவையும், வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 6-1  என ஸ்பெயினின் கார்லா ஸ்வரûஸயும் வென்றனர்.
இளம் வீராங்கனை ஆன்ட்ரீஸ்கு 6-3, 6-3 என சோபியாவையும், கெர்பர் 3-6, 6-3, 6-3 என கரோலினாவையும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com