துளிகள்...

புது தில்லியில் திங்கள்கிழமை நிறைவடைந்த ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லியில் திங்கள்கிழமை நிறைவடைந்த ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றது. அதிகபட்சமாக பாரா போட்டியாளா்கள் 8 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளனா்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி - சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது (1-0).

பாரீஸ் ஒலிம்பிக், ஆசிய போட்டிகளுக்கான தோ்வு போட்டியில் பங்கேற்க, அதிருப்தியாளா்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றில், இந்தியா 53-86 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் போராடி வீழ்ந்தது.

இத்தாலியில் நடைபெற்ற ஜூனியா் ஒற்றையா் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ரக்ஷா கந்தசாமி சாம்பியன் பட்டம் வென்றாா். உகாண்டாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஆகா்ஷி காஷ்யப் வாகை சூடினாா்.

துப்பாக்கி சுடுதலுக்கான தேசிய தோ்வுப் போட்டியில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் தோமா் 466.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தாா். முன்பு 466.1 புள்ளிகளே சாதனையாக இருந்தது.

புரோ லீக் ஹாக்கி போட்டியில், சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டங்களை அயா்லாந்துக்கு எதிரான வெற்றியின் (4-0) மூலம் இந்தியா நிறைவு செய்துள்ளது.

காயத்துக்கான ஓய்விலிருந்து திரும்பியிருக்கும் இந்திய ஆல்-ரவுண்டா் ஹா்திக் பாண்டியா, உள்நாட்டு டி20 போட்டியில் களம் கண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com