தமிழ்நாடு

எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது; அந்த கையெழுத்தும் போலி: 'டைரி' சர்ச்சைக்கு சேகர் ரெட்டி பதில்! 

DIN

சென்னை: எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது; வெளியாகியுள்ள டைரியில் உள்ள கையெழுத்தும் போலி என்று 'லஞ்சப் பண டைரி' விவகாரத்தில்  சர்ச்சைக்குரிய பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கியப் பக்கங்கள் என்று கூறி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதில் தமிழக அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது இது தற்பொழுது மிகுந்த பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.  

இந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்வதுடன், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சேகர் ரெட்டி தனது தரப்பினைக் குறித்து தமிழ் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த விவகாரத்தில் முதலில் அது எனது டைரியே கிடையாது. என் வீட்டிலிருந்து எந்த ஒரு டைரியும் கைப்பற்றப்படவில்லை.சொல்லப் போனால் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. அதில் குறிப்பிட்டுள்ள யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சொல்லப்போனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினை நான் எனது வாழ்க்கையில் இரண்டு முறைதான் சந்தித்துள்ளேன். திருப்பதியில் ஒரு முறையும், எனது வீட்டில் ஒரு முறையுமே ஆகும்.

நான் எனது வருமான வரி கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வருகிறேன். இன்னும் சொல்லப் போனால் 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கு முறையாக வருமானவரி கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளேன். மேலும் ரூ.31 கோடி வருவாய் முன்பணமாகச் செலுத்தியுள்ளேன். எனது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட  தொகை ரூ. 12 லட்சம்தான். அதுவும் பழைய ரூபாய் நோட்டுகள்தான்.

குறிப்பிட்ட அந்த டைரியில் உள்ள கையெழுது யாருடையது என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அது எனது கையெழுத்து இல்லை. போலியாகக் கூடத் தயாரிக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள குற்றசாட்டுகள் உண்மையில்லை. தவறான தகவல்களை வைத்து அம்மாதிரி கூறுகிறார்.

நான் நியாயமான முறையில் தொழில் செய்து வருபவன்.இந்தியா முழுமையிலும் நான் ஒப்பந்த வேலைகள் செய்கிறேன். எனது எல்லா பணப் பரிமாற்றங்களும் வங்கிகள் மூலமாகவும், காசோலைகள் மூலமாகவும்தான். அனைத்துக்கும் நான் ஒழுங்காக வரி கட்டி வருகிறேன்.

ஒழுங்காக இயங்கி  வரும் என்மீது  குற்றசாட்டுகள் கூறுவது மனதிற்கு வருத்தத்தினை தருகிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது ரூ.25 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறேன்.

இவ்வாறு சேகர்ரெட்டி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT