தமிழ்நாடு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி துவக்கம்

DIN


தமிழக அரசின் சார்பில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. 

நிகழாண்டு வல்வில் ஓரி விழா வியாழக்கிழமை தொடங்கியது. செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைத்தார். முன்னதாக கொல்லிமலை வாசலூர்ப்பட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியை ஆட்சியர் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். 

மலர் கண்காட்சியில் கொய் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, செல்பி அமைப்பு, மலர் ரேம்ப் ஆகிய உருவங்கள் அனைவரையும் கவர்ந்தன. மேலும் தாவரவியல் பூங்காவில் காய்கறி வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கத்தரி மற்றும் செர்ரிப் பழங்களைக் கொண்டு ஐந்தரை அடி உயரமுள்ள ஸ்பைடர்மேன், கருப்பு திராட்சை மற்றும் கத்தரிக்காய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 3 அடி உயரம் கொண்ட இரண்டு யானைகள். பாவைக்காய் மூலம் உருவாக்கப்பட்ட 5 அடி நீளம் கொண்ட முதலை, பூசணிக்காய், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 7 அடி நீளமுள்ள டிராகன் உருவம் போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தன. ஓரி விழாவின் இரண்டாம் நாளான 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வில்வித்தைப் போட்டி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT