தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக 8 ஜோடி வன விலங்குகள்

DIN


சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடிட்ட கழுதைப் புலி, குள்ளநரி, தங்க நிறக்கோழி உள்ளிட்ட 8 ஜோடி வன விலங்குகள் கர்நாடக மாநிலம், ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், பாலூட்டி இனங்கள் 455, பறவை இனங்கள் 1,433, பாம்பு, முதலை, பல்லி இனங்கள் 424 என மொத்தம் 2,302 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
இந்தப் பூங்காவுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மாதம்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வன விலங்குகளைக் காண வரும் மக்களின் எதிர்பார்ப்பு காரணமாகவும், அவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வண்டலூர் பூங்காவுக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து 8 ஜோடி வன விலங்குகள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளன.
8 ஜோடி வன விலங்குகள்: இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ் கூறியது: விலங்குகள் பரிமாற்ற முறையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி வெள்ளைப் புலிகள், இந்திய காட்டுமாடு (ஆண்), ஆண் சிங்கவால் குரங்கு, ஒரு ஜோடி நீலகிரி கருங்குரங்குகள் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
அதற்கு மாறாக அங்கிருந்து 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலிகள், ஆண் இந்திய காட்டுமாடு, ஒரு ஜோடி லேடி அம்ஹர்ஸ்ட் கோழி, ஒரு ஜோடி குள்ளநரி, ஒரு ஜோடி தங்க நிறக் கோழி, ஒரு ஜோடி சாரஸ் கொக்கு, ஒரு ஜோடி கருப்பு அன்னப்பறவை, ஒரு ஜோடி ஈகிளக்டஸ் கிளி ஆகியவை பெறப்பட்டுள்ளன. 
தற்போது, இந்த வன விலங்குகள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று வார கண்காணிப்புக்குப் பின் அவற்றை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT