மெரினாவில்  இனி நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை மெரினா கடற்கரையில் இனி நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினாவில்  இனி நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இனி நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்திமதி என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் இனி மறைந்த தலைவர்களுக்கான நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்குத் தொடர்ந்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைப்பதன் காரணமாக மெரினா கடற்கரையின் அழகு கெடுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட்டது. ஆனால் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இனி நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கானது செவ்வாயன்று நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது, வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, மனுதாரர் காந்திமதி ஆஜராகிக் கூறியதனைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள  நிலையில், இப்படி ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com