பி.இ. கலந்தாய்வு: 5 -ஆம் சுற்றுக்கு கூடுதல் அவகாசம்

பொது விடுமுறை காரணமாக, பி.இ. 5 -ஆம் சுற்று ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பொது விடுமுறை காரணமாக, பி.இ. 5 -ஆம் சுற்று ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான 5 -ஆம் சுற்று கலந்தாய்வில் இடங்கள் தேர்வு ஆகஸ்ட் 14 -ஆம் தேதி தொடங்கி 16 -ஆம் தேதி முடிவடைய இருந்தது. ஆகஸ்ட் 17 -ஆம் தேதி மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட இருந்தது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
இதன் காரணமாக, 5 -ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்ய சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆக.20 கடைசி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களில் சேர்ந்துக் கொள்வதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி நாளாகும்.
துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் மட்டுமே அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். 
சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை www.annauniv.edu http://tnea.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சந்தேகங்களை 044 - 2235 9901 - 20 தொலைபேசி எண்களிலும், 1800 425 9779 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com